பெரியவர்களுள் நரம்பியல் மனநல கோளாறுகள், உயிரியல் மற்றும் பல உளவியல் சமூக ரீதியான காரணிகளால் ஏற்படலாம். வலிப்பு நோய், தலை காயம், மூளை கட்டிகள், தலை வலி மற்றும் வலி நோய்குறிகள், பார்க்கின்சன் மற்றும் பிற இயக்க கோளாறுகள் போன்ற நரம்பியல் பிரச்சனைகள் உள்ள பெரியவர்களில் நினைவாற்றல், மனநிலை மற்றும் விரக்தி பிரச்சனைகள் இருக்கும். மறுபுறம், விரக்தி மற்றும் ஃபோபிக் நிலைகள், இருமுனை மனநிலை கோளாறுகள், மன அழுத்தம், வெறித்தனமாய் கட்டாயப்படுத்தும் கோளாறு மற்றும் மனநோய் போன்ற, பெரியவர்களுக்கு ஏற்படும் மனநல பிரச்சனைகளுக்கு தனித்துவத்துவமான மனநல தேவைகள் இருக்கின்றன. விளக்கமுடியாத மருத்துவ அறிகுறிகள், ஃபைப்ரோமியால்ஜியா, நாள்பட்ட வலி முதலிய பிரச்சனைகளை உடைய நோயாளிகளுக்கான தீர்வுகள் இன்னும் கிடையாமல் இருக்கின்றன. எங்கள் விரிவான பராமரிப்பு அணுகுமுறை மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை மீண்டும் செய்யவும், சிறப்பான வாழ்க்கை தரத்தைக் கொடுக்கவும் உதவுகிறது.